Friday, August 15, 2008

காதலும் கவிதையும்!!!

சற்று முன் நீ
நடந்து போன தடயம் எதுவும் இன்றி
அமைதியாக கிடக்கிறது வீதி
எனினும்
அதிவேக ரயில் கடந்த போன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கின்றது
என் இதயம்


நீ
கிடைக்கலாம்
கிடைக்காமல் போகலாம்
ஆனால்
உன்னால் கிடைக்கும் எதுவும்
எனக்கு சம்மதம்தான்


மரத்தின்கீழ்
உனக்காக காத்திருக்கையில்
மரமேறிப் பார்க்கும்
மனசு


என் கண்கள் தினமும் எத்தனை முறை இமைக்கும் -
கேட்டால் சொல்லிவிடுவேன்...
உன்னை தினமும் எத்தனை முறை நினைக்கிறேன்
என்றல்லவா கேட்கிறாய்!!
என் கற்பனை வளத்தை கொன்றவள் நீ
என் கற்பனைகள் உன்னைத் தாண்டிச் செல்ல மறுக்கின்றன...

நீ என் முன் வரும் காலம் தான் - எனக்கு வருங்காலம்.
நம் சந்திப்பு நிகழும் காலம் தான் - எனக்கு நிகழ்காலம்.
நீ காதலை மறுத்தால் மட்டுமே நிகழும் - எனக்கு இறந்த காலம்

நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பினாய்...
ஏனொ மருத்துவம் சம்பந்தமாக கேள்வி கேட்கிறேன் என்றாய்.
"உன் உடல் symmetricஆ?" என்று கேட்டாய்.
"ஆம்" என்றேன் சிந்திக்காமல்.
"இல்லை.இதயம் இடது பக்கம்" என்றாய் -
என்னை வென்ற பெருமிதத்துடன்...
"என்னிடம் வலது பக்கமும் இருக்கிறது, உன் இதயம்" என்றேன்.
வெட்கப்பட்டாய்...
"வெட்கம் கூட இப்படி வெட்கப்பட்டிருக்காது" என்றேன்.
"காதல் கூட இப்படி காதலித்திருக்காது" என்றாய் -
இன்னும் வெட்கத்துடன்.
அலார மணியோசை நீ சொன்னதை உறுதிப்படுத்தியது

பார்வையில் அணுஅணுவாய் கதிர்வீச்சு பாய்தல்
விடைகள் கேட்டு விழி அம்பு எய்தல்
காகிதம் இன்றி (கேள்விக்)கணை தொடுத்தல்
உன் நினைவுச் சிறையில் என்னை அடைத்தல்
மோகம் பாய்தல் தேகம் சாய்தல்
உள்ளம் கடத்தல் உயிர் கொய்தல்
என் மனதில் தீவிர வாதம்...காதல் தீவிரவாதமா?
அத்தி பூத்தது...உன்னை பார்த்தது
பார்த்த நாள் முதல் - தினமும் பூத்தது!

No comments: